TNTET 2022: தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு வெளியீடு.. பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் உள்ளே

By Thanalakshmi V  |  First Published Oct 8, 2022, 12:28 PM IST

ஆசிரியர் தேர்வு வாரியாமானது,  ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கணினி வழி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியாமானது,  ஆசிரியர் தகுதித் தேர்வு கால அட்டவணையை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கணினி வழி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் http://trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தேர்வுக்கான அட்டவணையை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் தேர்வு மையங்களுக்கான அனுமதிச் சீட்டு 1 ஐ தற்போது பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.ஆனால் அனுமதிச் சீட்டு 2-ஐ தேர்வு தேதிக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்யலாம் என்று டிஆர்பி தெரிவித்துள்ளது. 

Latest Videos

மேலும் படிக்க:ntse exam:ncert: மாணவர்களுக்கான என்டிஎஸ்இ உதவித் தொகைத் திட்டம் நிறுத்திவைப்பு: என்சிஇஆர்டி அறிவிப்பு

இந்தாண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் 14 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறுகிறது. கடந்த மாதம் 23 ஆம் தேதி தேர்வு தேதிக் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது தேர்வு கால அட்டவணையை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க:upsc online App: சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக புதிய ‘ஆப்ஸ்’: யுபிஎஸ்சி அறிமுகம்

click me!