8, 12, டிகிரி படித்தவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறையில் அரசு வேலை.. கை நிறைய சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.

By Ezhilarasan Babu  |  First Published Oct 8, 2022, 1:26 PM IST

எட்டு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் இளநிலைப் பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் கொண்டவர்கள் ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது. 


எட்டு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் இளநிலைப் பட்டத்துடன் கணினியில் பணியாற்றும் திறன் கொண்டவர்கள் ஈரோடு மாவட்ட பொது சுகாதாரத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.  தகுதியான நபர்களிடம் இருந்து வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அரசு பணிக்கு செல்ல வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளும் அடிக்கடி வந்தவண்ணம் உள்ளன. இந்த வரிசையில் ஈரோடு மாவட்ட பொது சுகாதார துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Tap to resize

Latest Videos

1. 3- data entry operator பணியிடங்கள் காலியாக உள்ளன,  இப்பணிக்கு மாதம் 13 ஆயிரத்து 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் 12 ஆம் வகுப்பு , அல்லது ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டத்துடன்  கணினியில் வேலை செய்யும் திறன் பெற்றிருப்போர்,  எம்எஸ் ஆபீஸ் சான்றிதழ் பெற்றிருப்போர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.  Operation theatre assistant பணியில் 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு மாதம் 11 ஆயிரத்து 200 ரூபாய்  ஊதியம் வழங்கப்படும் என்றும் OT technical பிரிவில் குறைந்தது 3 மாத பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. MPHW -6  காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும்,  மாதம் 8500 ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

4. Security Guard  பணிக்கு 2 காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் மாதம் 8500 சம்பளம் வழங்கப்படும் என்றும், இப்பணிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. Physical assistant -3  காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் மாதம் ஊதியம் 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்  சைக்காலஜி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்ற  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

6. Early invention cum special education comp special worker- 1  காலி பணியிடம் உள்ளதாகவும், மாதச் சம்பளம் 17,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் சமூகவியல் பணிப் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

7. OT technical -1  ஒரு காலி பணியிடம் உள்ளதாகவும், இதற்கு மாத சம்பளம் 11700 ரூபாய் வழங்கப்படும் என்றும்,  OT Tecnical  பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

8. Refrigeation Mechanical -1  ஒரு காலிப் பணியிடம் உள்ளதாகவும், மாத ஊதியம் 20,000 வழங்கப்படும் என்றும் mechanic in refrigeration air conditioning (MRAC)  பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், ஒரு ஆண்டு அனுபவம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வழங்கப்படுகிறது, விண்ணப்பிப்போர் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றுகளின் நகல்களை இணைத்து, கையொப்பமிட்டு, (நிர்வாக செயல் துணை இயக்குநர். சுகாதாரப்பணிகள். மாவட்ட நல்ல வாழ்வு சங்கம்.  ஈரோடு மாவட்டம்.  ஈரோடு 638012 தொலைபேசி எண் 0424 2431020 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்) 10-10-2022 க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!