கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பட்டதாரி வாலிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பட்டதாரி வாலிபர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் பட்டதாரி வாலிபர் அர்ஜூன்(34). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு வீடுகள் உள்ளது. ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருந்தனர். மற்றொரு வீட்டை சுற்றிலும் தென்னை ஓலையால் மறைப்பு ஏற்படுத்தப்பட்டு, மேற்கூரை, இரும்பு தகடால் அமைக்கப்பட்டு இருந்த மற்றொரு வீட்டில் அர்ஜூன் தூங்கி உள்ளார்.
இதையும் படிக்க;- சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. தண்டவாளத்தில் சடலமாக கிடந்த சென்னை ஐ.ஐ.டி. மாணவி..!
எப்போதும் தூங்கும் போது செல்போனை சார்ஜ் போடுவதை வழக்கமாக வைத்திருந்தார். நள்ளிரவில் திடீரென செல்போன் சார்ஜர் வெடித்ததில் ஏற்பட்ட தீ குடிசையில் பரவியது. தீ விபத்தில் குடிசை வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் அர்ஜூன் வீட்டின் உள்ளேயே மனைவி கண்முன்னே உடல் கருகி அர்ஜூன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்கு சுற்றிலும் தென்னை ஓலையால் மறைக்கப்பட்டு இருந்ததாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அர்ஜீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க;- கோவையில் பயங்கரம்.. மென்ஸ் சலூனில் பேசியல் செய்த 17 வயது சிறுவனின் முகம் வெந்துபோனது.!