முக்கிய ரயில்களின் வழித்தடம் மாற்றம்.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Aug 9, 2022, 12:04 PM IST
Highlights

ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக மதுரையைக் கடந்து செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணியின் காரணமாக மதுரையைக் கடந்து செல்லும் முக்கிய ரயில்களின் வழித்தடங்கள் மாற்றப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- ஜூலை 25ம் தேதி முதல் ஆகஸ்ட் 14ம் தேதி வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் பாதைப் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், சில ரயில்கள் கரூா், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விவரம்;-

ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா ரயில் நிலையத்திலிருந்து ஜூலை 28, ஆகஸ்ட் 4, 11 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய திருநெல்வேலி விரைவு ரயில் (16788), திருநெல்வேலியில் இருந்து ஜூலை 25, ஆகஸ்ட் 1, 8 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கட்றா விரைவு ரயில் (16787). சண்டிகரிலிருந்து ஜூலை 25, 29 மற்றும் ஆகஸ்ட் 1, 5, 8, 12 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (12688), மதுரையில் இருந்து ஜூலை 27, 31 மற்றும் ஆகஸ்ட் 3, 7, 10, 14 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய சண்டிகா் விரைவு ரயில் (12687).

ஓகாவில் இருந்து ஜூலை 29 மற்றும் ஆகஸ்ட் 5, 12 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (19568),  தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24, 31 ஆகஸ்ட் 7 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய ஓகா விரைவு ரயில் (19567), கச்சக்குடாவில் இருந்து ஜூலை 30 ஆகஸ்ட் 6, 13 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய மதுரை விரைவு ரயில் (17616), மதுரையில் இருந்து ஜூலை 31 ஆகஸ்டு 7, 14 ஆகிய நாள்களில் புறப்பட வேண்டிய கச்சக்குடா விரைவு ரயில்(17615)

தூத்துக்குடியில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய மைசூா் விரைவு ரயில் (16235), மைசூரில் இருந்து ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 13 வரை புறப்பட வேண்டிய தூத்துக்குடி விரைவு ரயில் (16236) ஆகியவை ஈரோடு வழியாக செல்வதற்குப் பதிலாக கரூா், நாமக்கல், சேலம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!