பரோட்டா குருமாவில் பல்லி.. சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அட்மிட்.. ஓட்டலுக்கு அதிரடியாக சீல்.!

By vinoth kumar  |  First Published Jun 16, 2022, 7:33 AM IST

ஈரோட்டில் குருமாவில் பல்லி விழுந்தது தெரியாமல் பரோட்டாவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.


ஈரோட்டில் குருமாவில் பல்லி விழுந்தது தெரியாமல் பரோட்டாவை சாப்பிட்ட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

குருமாவில் பல்லி

Latest Videos

undefined

ஈரோடு  காந்திஜி சாலையில் உள்ள கருப்பணா அசைவ உணவகத்தில் அறச்சலூர் ஓடாநிலை பகுதியை சேர்ந்த  அமுதா (40), சந்திரன் (48), சண்முகம் (32), சுரேஷ் (32) ஆகியோர் ஓட்டலுக்குள் சென்று பரோட்டா சாப்பிட்டனர். அப்போது ஓட்டல் ஊழியர் பரோட்டாவுக்கு குருமா ஊற்றினார். அதில், இறந்து போன பல்லி  இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

வாந்தி மயக்கம்

இதைப்பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த அமுதா, சந்திரன், டிரைவர் சுரேஷ், சண்முகம் ஆகிய 4 பேரும் வாந்தி எடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, 4 பேரும் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

ஓட்டலுக்கு சீல்

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு சூரம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுறித்து போலீசார் அளித்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்க விக்னேஷ் உணவகத்தில் ஆய்வு நடத்தினார். உணவகம் சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருவது ஆய்வில் தெரியவந்ததால், அதனை தற்காலிகமாக மூட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். 

click me!