குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க மாமூல் - அதிரடி நடவடிக்கை எடுத்த காவல் ஆணையர்!

By manimegalai aFirst Published Nov 4, 2018, 6:02 PM IST
Highlights

சென்னையில்குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில், மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

சென்னையில், குற்றவாளிகளை கைது செய்யாமல் இருக்க லஞ்சம் பெற்ற வழக்கில், மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐக்கள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

சென்னை பாடியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கு சொந்தமான நிலத்தை, கலைச்செல்வி, மணிமேகலை, தீனதயாளன் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்ய முயன்றார்.

இதுகுறித்து மகேந்திரன், சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு எஸ்ஐ சந்தியா, சிறப்பு எஸ்ஐ சிவஞானம் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் 2 பேரை, கைது செய்யாமல் இருக்க, ரூ.1 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர்.

ராஜாராம் என்பவரிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவஞானம் லஞ்சம் கேட்டனர். இதுதொடர்பாக ராஜாராம், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார், விசாரித்த்தில்,

போலீசார் நடத்திய விசாரணையில், செல்போனில் பேசியது பெண் எஸ்ஐ சந்தியா மற்றும் எஸ்ஐ சிவஞானம் என்பதும், லஞ்ச பணத்தை பங்கு போட்டுக் கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

click me!