இதுக்கு ஒரு முடிவே இல்லையா? இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 18 பேர் கைது.. படகுகள் பறிமுதல்!

By vinoth kumar  |  First Published Jun 23, 2024, 8:24 AM IST

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. 


எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேலும் மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். தமிழக மீனவர்களின் கைதை கண்டித்தும் இலங்கை அரசுக்கு எதிராகவும் அவ்வப்போது மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: சாவு எப்படியெல்லாம் வருது பார்த்தீங்களா? எமன் ரூபத்தில் வந்த மாடு! பஸ் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பலி!

இந்நிலையில், தமிழக மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மூன்று படகையும் அதில் இருந்த 18 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

இதையும் படிங்க:  Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 4 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்.. வானிலை மையம் அலர்ட்!

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் ஒப்படைக்கப்பட உள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை கடற்படையின் அடாவடி தனம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!