தமிழகம் முழுவதும் 1,614 வழக்குகள் பதிவு… விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக புகார்!!

By Narendran SFirst Published Nov 5, 2021, 12:23 PM IST
Highlights

தமிழகம் முழுவதும்  விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகளை விற்பனை செய்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்  விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசுகளை விற்பனை செய்ததாக 259 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 58 தீவிபத்து சம்பவங்கள் நடைபெற்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடைகளை அணிந்து இனிப்புகளை பரிமாறிக்கொண்டு பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதற்கிடையே பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கும் பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதுமே நேற்று பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. இதை அடுத்து அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதோடு சிலர் கைது செய்யப்பட்டனர். அதன்படி, தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் வழிகாட்டுதலை மீறி பட்டாசுக் கடைகள் நடத்தியதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 517 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக,சென்னையில் ராயப்பேட்டை, கீழ்பாக்கம்,அயனாவரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 373 வழக்குகள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக 2020 ஆம் ஆண்டு 428 வழக்குகளும், 2019 ஆம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது. தீபாவளி அன்று தமிழ்நாடு முழுவதும் 58 தீவிபத்து சம்பவங்கள் நடைபெற்றதாக தமிழ்நாடு தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் விதிகளை மீறி பட்டாசு வெடித்தல், விதி மீறி பட்டாசு விற்பனை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதனிடையே பட்டாசு வெடித்ததால் காற்று மாசு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!