சுட்டெரிக்கும் வெயிலில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க மதுரை மாநகராட்சி பலே ஐடியா; பொதுமக்கள் பாராட்டு

By Velmurugan s  |  First Published May 4, 2024, 4:55 PM IST

மதுரை மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் சிக்னலில் நிற்கக்கூடிய வாகன ஓட்டிகளை சற்றே வெயிலில் இருந்து காப்பாற்றும் வயைில் சாலையில் தற்காலிக மேற்கூரை அமைத்ததற்கு வாகன ஓட்டிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


சுட்டெரிக்கும் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டு இருக்க கூடிய வேலையில் வாயில்லா ஜீவன்கள் முதல் சாலைகளிலே செல்லும் வாகன ஓட்டிகள் வரை அனைவரும் நாளுக்கு நாள் தவித்து வரக்கூடிய வேலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலர்களும், தமிழக அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாயில்லா ஜீவன்கள் முதல் வீட்டில் இருக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை இந்த சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள  அறிவுறுத்தப் படுகின்றனர். 

Latest Videos

undefined

இந்த நிலையில், மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சிம்மக்கல் நோக்கி செல்லக்கூடிய பகுதியில் இன்று மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் இன்று நான்கு சாலைகளில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டுகள் சிக்னலுக்காகக் காத்திருக்கும் போது சுட்டெரிக்கும் வெயில் அவர்களை தாக்காத வண்ணம் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டது.

முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு

மொத்தம் 50 அடி நீளத்திற்கு அந்த மேற்குறை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சிக்னலுக்காக காத்திருக்கக்கூடிய அந்த 30 வினாடிகள் சற்று இளைப்பாறக் கூடிய வகையிலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து அவர்களை பாதுகாத்துக் கொள்ள மாநகராட்சி எடுத்துள்ள இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

click me!