பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் வாகனம் விபத்துக்குள்ளானது.
கோவைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை வாகனம் தாராபுரம் அருகே விபத்துக்குள்ளானது. காலில் லேசான காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாற்று வாகனத்தில் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிடம் பேசிய சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
undefined
இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் என்று காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுவதாக கூறப்படுகிறது. சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட வழக்கு விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, 293 (பி),509 மற்றும் 353 ipc r/w section 4, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் section 67 இன்பர்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2000 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தகாத வார்த்தையில் பேசுதல், பெண்கள் குறித்து அவதூறாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசார் தங்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோவில் சவுக்கு சங்கர் பற்றி பேசியுள்ளார். அதில், “சவுக்கு சங்கர் நீதிபதிகள் வீட்டில் பணிபுரியும் பெண்கள் குறித்து தவறாக பேசி ஏற்கனவே கைது செய்யப்பட்டு 2 மாதங்கள் ஜெயிலில் இருந்தார். தற்போது தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பெண் காவலர்கள் பற்றியும் அவதூறாக பேசியுள்ளார்.
காவல்துறை மட்டுமல்ல, அனைத்து இடங்களிலும் பணிபுரியும் பெண்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார். இதனை இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படும் ஜெயலலிதா தலைவியாக இருந்த அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி சங்கர் கைதை கண்டித்துள்ளார்.
தனக்கு அல்லக்கையாக இருந்த சவுக்கு சங்கர் என்ன பேசுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி பார்க்க வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் சங்கருக்கு 6 வருடம் ஜெயிலில் அடைந்திருப்பார். அல்லது என்கவுண்டரில் போட்டிருப்பார். பொத்தம் பொதுவாக யாரையும் குற்றச்சாட்டு வைப்பது தவறு ஆகும். ஆற்று மணலை திருடுவார்கள் கூட கூட்டாக இருந்தவர் சவுக்கு சங்கர்.
சபரீசன் எனக்கு 20 முறை கால் பண்ணியிருந்தார் என்று கூறினார் சவுக்கு சங்கர். அதிமுக நிலைப்பாடு எடுத்து நாம் தமிழர் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்தார். கருத்து சுதந்திரம் என்று பேசும் சவுக்கு சங்கர் தனக்கு மட்டும் பேசுகிறார். ஜெயிலுக்கு போனாலும் ஜாலியாக இருப்பார் சவுக்கு சங்கர்” என்று தனது காணொளியில் கூறியுள்ளார் சாட்டை துரைமுருகன்.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?