பால்வாடி செல்லும் பச்சிளம் குழந்தையையும் விட்டு வைக்காத காம கொடூரன்; வத்தலகுண்டுவில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published May 4, 2024, 4:46 PM IST

வத்தலக்குண்டு அருகே வீருவீட்டில் பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலித் தொழிலாளியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா விருவீடு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மணி, (வயது 38). இவர் இதே பகுதியைச் சேர்ந்த சுமார் இரண்டரை வயது பால்வாடி படிக்கக்கூடிய பச்சிளங் குழந்தையை நேற்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அவரது பெற்றோர்களும் உறவினர்களும் விருவீடு போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகார் மனு அளித்தனர். 

முதல் மாத சம்பளத்தில் பெற்றோருக்கு விசத்தை வாங்கி கொடுத்த மகன், முதியவரை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு

Tap to resize

Latest Videos

undefined

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க அறிவுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து இரண்டரை வயதுள்ள  பச்சிளங் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்த கூலித் தொழிலாளி பிச்சைமணி மீது நிலக்கோட்டையை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

நெல்லையில் மாயமான காங்கிரஸ் தலைவரின் உடல் எரிந்த நிலையில் மீட்பு; காங்கிரஸ் எம்எல்ஏ.வுக்கு தொடர்பு?

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த ஆய்வாளர் ராமலட்சுமி, பிச்சைமணியை கைது செய்து நிலக்கோட்டை மேஜிஸ்திரேட் நல்ல கண்ணன் முன்னிலையில் காவல் துறையினர் ஆஜர் படுத்தினர். பின்னர் விசாரித்து மேஜிஸ்ட்ரேட் 15 நாள் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். பச்சிளம் குழந்தையை பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!