நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர்....ஓராண்டு சிறை விதித்து ஓசூர் நீதிமன்றம் தடாலடி...!

By thenmozhi gFirst Published Sep 7, 2018, 5:54 PM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம், தேர்ப்படையைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர், கடந்த 29.9.2011 அன்று ஓசூர் பிடிஓ அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார்.

மீண்டும் நில அபகரிப்பு; மாஜி  திமுக பிரமுகருக்கு ஜெயில்

கிருஷ்ணகிரி மாவட்டம், தேர்ப்படையைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர், கடந்த 29.9.2011 அன்று ஓசூர் பிடிஓ அலுவலகத்தில் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதனைப் பார்த்த அருகிலிருந்தோர் அவரைக் காப்பாற்றி போலீசிடம் ஒப்படைதனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

விசாரணையில், ஈஸ்வரிக்கு சொந்தமான நிலத்தை என்.எஸ். மாதேஸ்வரன் என்பவர் விற்பனை செய்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரி, மாதேஸ்வரனிடம் கேட்டுள்ளார். அதற்கு மாதேஸ்வரன், ரவுடிகளை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக தெரிகிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் ஈஸ்வரி புகார் செய்திருக்கிறார். ஆனாலும், அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தன.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஈஸ்வரி தற்கொலை செய்ய முடிவுக்கு தள்ளப்பட்டதாக ஈஸ்வரி தெரிவித்திதிருந்தார். இதனை அடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளியாக மாதேஸ்வரன் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. குடும்ப சூழல் மற்றும் நன்னடத்தை காரணமாக ஈஸ்வரியை விடுதலை செய்வதாகவும், ஈஸ்வரி தற்கொலை முயற்சிக்கு காரணமாக இருந்த திமுக பிரமுகர் மாதேஸ்வரனுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.

click me!