தமிழகத்தில் 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட்..! 2018 இல் மட்டுமே..!

By thenmozhi gFirst Published Sep 15, 2018, 4:54 PM IST
Highlights

2018-ம் ஆண்டு தொடங்கி முதல் 6 மாதங்களில் இதுவரை தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதற்காக 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெணட் செய்யப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டு தொடங்கி முதல் 6 மாதங்களில் இதுவரை தமிழகத்தில் பல்வேறு போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதற்காக 1.56 லட்சம் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெணட் செய்யப்பட்டுள்ள எனத் தெரியவந்துள்ளது.

இதில் அதிகபட்சமாக செல்போன் பேசிக்கொண்டே வாகனம், இருசக்கர வாகனங்கள் ஓட்டியதற்காக 64,105 ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன.கடந்த 2017-ம் ஆண்டு செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதற்காக 57 ஆயிரத்து 158 பேரின் ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் முதல 6 மாதங்களில் 64,105 பேருக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லுதல், மதுஅருந்திவிட்டு வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கை மதிக்காமல் மீறிச் செல்லுதல், அதிகவேகம், சரக்குவாகனங்களில் கூடுதல் சுமை ஏற்றியது போன்றவை மீது வழக்குகள் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விபத்து ஏற்படுத்துதல், உயிர்சேதம் ஏற்படுத்துதல் போன்றவை காரணமாக 2,658 பேருக்கு ஓட்டுநர் உரிமங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டும், 1,066 பேருக்கு நிரந்தரமாக ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள் கூட விபத்து ஏற்படுத்தியதால், ஓட்டுநர் உரிமம் சஸ்ெபண்டுக்கும், ரத்துக்கும் ஆளாகி இருக்கிறார்கள்.

அதிவேகம், சரக்கு வாகனத்தில் அதிக சுமைஏற்றுதல், சரக்குவாகனத்தில் மனிதர்களை ஏற்றுதல், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுதல், மதுபோதையி்ல வாகனம் ஓட்டுதல்,சிவப்பு விளக்கை மீறுதல் போன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் சஸ்பெண்ட் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்துள்ளதால், அதன்படி போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து விதிமுறை மீறல்கள் ஈடுபடுவோர் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய புதிதாக மென்பொருள் தயாரிக்கப்பட்டுவருகிறது. தற்போது போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய குறைந்தபட்சம் 2 மாதங்கள் தேவைப்படும். ஆனால், அதற்குரிய சாப்ட்வேர் வந்துவிட்டால், நடவடிக்கை வேகமாக எடுக்க முடியும்.

உதாரணமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரும் வாகனம் சென்னையில்போக்குவரத்து குற்றத்தில் ஈடுபட்டால், அந்த வாகனத்தின் விவரங்கள் உடனடியாக கன்னியாகுமரி போக்குவரத்து துறை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு, ஓட்டுநரின் உரிமமம் சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும்.

ஆனால் இப்போதுள்ள நடைமுறையில் ஆர்.டி.ஓக்கள் தங்களுக்கு புள்ளிவிவரங்கள் கிடைத்தபின்புதான் நடவடிக்கையில் இறங்குகிறார்கள். இதற்கு அதிக காலஅவகாசம் எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை தீவிரப்படுத்த மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறையுடன் இணைந்து சாரதி அப்ளிகேஷனை உருவாக்கி வருகிறோம்.

போக்குவரத்து போலீஸார், நாள்தோறும், போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் குறித்த விவரங்களை அந்த தளத்தில் பதிவு செய்யலாம். அதன்பின் அந்தந்த ஆர்டிஓக்கள் ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்யும் பணியில் ஈடுபடலாம். போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யும் துரிதப்படுத்தப்பட்டால், அடுத்து வரும் ஆண்டுகளில் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவது படிப்படியாகக் குறையும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
 

click me!