பாடம் நடத்துவதில் தனித்துவம்: தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசு பள்ளி ஆசிரியை

Published : Mar 23, 2023, 09:58 PM IST
பாடம் நடத்துவதில் தனித்துவம்: தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் அரசு பள்ளி ஆசிரியை

சுருக்கம்

விருதுநகரில் அரசு அங்கன்வாடி பள்ளி ஆசிரியை ஒருவர் பாடல் பாடியும், நடனமாடியும் மாணவர்களுக்கு ஆழமாக புரியும் வகையில் பாடங்களை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த ஜெய்லானி. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி ஆசிரியையாக பணியில் சேர்ந்துள்ளார். 

சிறுவர்களுக்கு தனது கலை திறமையை பயன்படுத்தி கல்வி கற்று கொடுத்து வருகிறார். ஆசிரியை ஜெய்லானி நடனமாடியபடி கற்று கொடுக்கும் பாடங்களுக்கு ஏற்ப பாடல் மெட்டுக்களை தயாரித்து கல்வி கற்று கொடுப்பது, முக்கிய தினங்களில் அன்றைய தினத்தின் சிறப்புகளை மாணவ செல்வங்களுக்கு தமக்கே உரிய பாணியில் கலையோடு எடுத்து சொல்வது என குழந்தைகளுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அடிப்படை வகுப்பு மூலம் அதிகப்படுத்தி வருகிறார்.

இதற்கு ஒரு படி மேலே சென்று குழந்தைகளுக்கு நகம் வெட்டி விடுவது, கைகளை சுத்தமாக வைத்து கொள்ள அறிவுறுத்தி கைகளை கழுவி விடுவது என குழந்தைகளுக்கு நல்ல பல பழக்கங்களையும் கற்று கொடுத்து வருகிறார். சிறார்களுக்கு கல்வி மீது மட்டுமல்லாமல் விளையாட்டு மீதான ஆர்வமும் ஏற்பட தினசரி அவர்களுக்குள் பல்வேறு விளையாட்டு போட்டிகளையும் நடத்தி அசத்தி வருகிறார். அவர் எடுக்கும் முயற்சியின் பலனாக குழந்தைகளும் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். 

நீதிமன்ற வளாகத்தில் ஆசிட் வீசிய நபரை துணிச்சலாக விரட்டி பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு

தமிழ், ஆங்கில பாடங்களை எந்தவித திணறல் இல்லாமல் சொல்லி அசத்துகிறார்கள். 10 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த நிலையில் ஆசிரியையின் முயற்சியால் அங்கன்வாடியில் தற்போது 25 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

கள்ளக்காதலியின் பேச்சைக் கேட்டு 5 ஆண்டுகளாக கொடுமை; காவலர் மீது பெண் பரபரப்பு புகார்

பெற்ற பிள்ளைகளை போல் நினைத்து அற்பணிப்போடு சிறார்களுக்கு தனது கலை திறன் மூலம் பாடங்கள் கற்று கொடுப்பது, நல்லொழுக்கம், ஆடல், பாடல், விளையாட்டு என பன்முக  தன்மையுடன் கூடிய அங்கன்வாடியை உருவாக்கியுள்ள இந்த ஆசிரியையின் முயற்சியை  பாராட்டி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கிளிமஞ்சாரோ சிகரத்தில் தமிழக சிறுவர்களின் இமாலய சாதனை! ரூ.1,00,000-ஐ அள்ளிக்க கொடுத்த நயினார் பாலாஜி! என்ன காரணம்?
இந்த சோகத்துக்கு ஒரு முடிவே இல்லையா? வெடி விபத்தில் தூள் தூளாக சிதறிய பட்டாசு ஆலை! 4 பேர் பலி!