சாத்தூரில் அரை மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை - பொது மக்கள் மகிழ்ச்சி

By Velmurugan sFirst Published Mar 20, 2023, 5:28 PM IST
Highlights

விருதுநகர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் சாத்தூரில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தமிழகத்தில் விருதுநகர், கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மதியம் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் வறட்சி மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் சில பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததோடு குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த  சில நாட்களாக சாத்தூர், சிவகாசி, தாயில் பட்டி சூளக்கரை, சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருவதால் கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை உருவானது.

தமிழ் கலாசாரமும், நாகரிகமும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது - ஆளுநர் ரவி புகழாரம்

இதே போன்று திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் சற்று குளுமையான சூழலை அனுபவித்து வருகின்றனர்.

முதல்வருடன் நேருக்கு நேர் வாதம் செய்த அரசு ஊழியர்கள்; டென்ஷனான முதல்வரால் பரபரப்பு

click me!