ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்த பொன்மாரி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் நல்ல குற்றாலம் பகுதியைச் சேர்ந்த கோடிஸ்வரி ஆகிய இருவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தனர். திருவிழாவை முடித்துவிட்டு ராஜபாளையம் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கேரளா மாநிலம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் பணிக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் சென்னை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனம் நிலைகுலைந்து அப்பளம் போல நொறுங்கியது.
பொள்ளாச்சியில் பயங்கரம்: பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி
விபத்தில் படுகாயமடைந்த வடக்கு மலையடிபட்டியைச் சேர்ந்த பொன்மாரி என்ற பெண் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு பெண் கோடிஸ்வரி பலத்த காயமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரில் பயணம் செய்தவர்கள் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அரியலூரில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
இந்த விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி வந்த சஞ்சீவ் பண்ணிக்கரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.