திருப்பத்தூர் அருகே நான்கு பெண்களுடன் தொடர்பிலிருந்து ஐந்தாவது ஆக 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற காதல் மன்னன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி இறந்த நிலையில், ஒரு பெண் பிள்ளை உள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி 4க்கும் மேற்பட்ட பெண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனிடையே மேற்கத்தியானூர் பகுதியில் கூலி வேலைக்கு வந்த இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி அச்சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றுள்ளார். இதன் காரணமாக சிறுமியின் தந்தை கடந்த மாதம் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
Priya Anand: திருச்செந்தூர் முருகன் கோவிலில் மெய்சிலிர்த்து நின்ற பிரியா ஆனந்த்
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல்துறையினர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த தள்ளப்பாடி கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தியும், 17 வயது சிறுமியும், உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
அதன் பிறகு 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கிருஷ்ணமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல்துறையினர் அவரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுமிக்கு போலீசார் பல்வேறு அறிவுரைகளை வழங்கி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.