Latest Videos

H Raja: சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எல்லாம் விடியல் கொடுத்தவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எச்.ராஜா விமர்சனம்

By Velmurugan sFirst Published Jun 27, 2024, 5:02 PM IST
Highlights

நாட்டிலேயே இளம் விதவைகள் தமிழகத்தில் தான் அதிகம் என்பதை கனிமொழி தனது கழுத்தில் எழுதி போட்டுக்கொள்ள வேண்டும் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

வேலூரில் பாஜக தொண்டர்களை சந்திக்க வந்த அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து 64 பேர் உயிரிழந்து உள்ளனர். இது பற்றி ஒரு வருத்தம் கூட தெரிவிக்காமல் சட்டமன்றத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் ஒளிந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு கூட அனுமதிக்காமல் அவர்களின் குரல் வலையை நெறிப்பது போல் சபாநாயகர் நடந்து கொண்டது ஜனநாயக மரபுக்கு எதிரானது.

சட்டமன்றம் முதல் நாளில் முதல்வர் ஸ்டாலின் நான் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை என்று சொன்னதற்கு எச். ராஜா எதிர்க்கட்சிகள் யாரும்  இல்லாமல் சட்டமன்றத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறினார். கள்ளக்குறிச்சியில் கள்ள சாராயம் குடித்து உயிரிழந்த சமயத்தில் வயிற்று வலி, வலிப்பு வந்து இறந்து போனதாக தகவல் வெளியிட்டு மறைக்கும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்டார்.

இளம் பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம்; தோழியின் ஸ்டேட்டசால் அம்பலமான காவலரின் சித்து விளையாட்டு

முதல்வர் ஸ்டாலின் அல்லது அமைச்சர் முத்துசாமி சொல்லாமல் கலெக்டர் இது போன்ற தகவலை சொல்லி இருக்க மாட்டார். அதனால் தான் நான் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினார். மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் ஸ்டாலினுக்கு பயம்? கள்ள சாராயம் காய்ச்சுபவர் வீட்டில் ரெய்டு நடத்தும் போது ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு என்ற ஸ்டிக்கர் கள்ள சாராயம் காய்ச்சுபவர் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ள சாராயம் காய்ச்சுபருக்கெல்லாம் விடியல் தரப் போறார் என்று தானே அதற்கு அர்த்தம். எனவே இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க குற்றவாளி இந்த அரசாங்கம் தான். தமிழ்நாட்டில் காவல் துறையினர் மாநில அரசாங்கத்திற்கு மிக மோசமான அடிமைகளாக நடந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண் போலீசை தவறாக பேசியது தவறுதான் சவுக்கு சங்கர் மீது எடுத்த நடவடிக்கை சரி. அவர் மீது குண்டர் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஆனால் மாண்புமிகு நிதி அமைச்சர் பற்றி இனியவன் என்கின்ற ஒரு youtube சேனலில் பேசுனதற்கு புகார் கொடுத்ததற்கு டிஜிபி என்ன செய்தார். விஷ சாராய அரசு என்று விமர்சனம் செய்தார். காவல்துறை உங்களை நீதிமன்றத்திற்கு இருக்கும்படி வைத்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் பிஜேபி சார்பாக புகார் கொடுத்துள்ளோம். நிதியமைச்சர் பற்றி அவதூறாக பேசியுள்ளார். திமுக அல்லது திக காரன் என்றால் அவதூறாக பேசினால் நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?

ஒருநாள் முதல்வன் பாணியில் ஒருநாள் தலைமை ஆசிரியை; அரசுப்பள்ளியில் அதிரடி ஆய்வு செய்த மாணவி

கள்ள சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு கொடுத்ததற்கு சமூக வலைதளங்களில் பல பேர் அதனை கிண்டல் செய்கிறார்கள். உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கவில்லை, நிற்கதியாகி போன குடும்பத்திற்குத் தான் நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்பி ஆக இருக்கும் கனிமொழி 2014ல், இந்தியாவிலேயே இளம் விதவைகள் அதிகம் உள்ளது தமிழ்நாட்டில் தான் என்றார். அதை இப்போது அவர் கழுத்தில் எழுதிப் போட்டுக் கொள்ள வேண்டும். 

ஆங்கில நாளிதழில் ஒரு சர்வேயில், 495 விதைவைகளில் 188 பேர் கள்ளசாராயம் குடித்து கணவனை இழந்தோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் விதவை ஆனதற்கு ஸ்டாலின், கருணாநிதி அவர்கள் குடும்பம் தான் காரணம். தமிழனை முதலில் குடிக்க வைத்து குடியை கெடுத்தது கருணாநிதி தான். கள்ள சாராயம் குடித்து உயிரிழந்ததற்கு, இந்தப் பாவத்திற்கு முழுக்க முழுக்க காரணம் கருணாநிதி. முதலில் முதல்வர் பொறுப்புள்ள மனிதராக நடந்து கொள்ள வேண்டும். 

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக.வின் வாக்கு எண்ணிக்கை ஆறு சதவீதம் குறைந்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. எனவே பாஜகவின் வளர்ச்சி தெளிவாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது என்றார்.

click me!