சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 7 கி.மீ. டோலி கட்டி தூக்கி சென்ற மலை கிராம மக்கள்

By Velmurugan s  |  First Published Oct 4, 2023, 2:07 PM IST

திருப்பத்தூரில் சாலை வசதி இல்லாத காரணத்தால் நிறைமாத கர்ப்பிணியை மலை கிராம மக்கள் 7 கி.மீ. டோலி கட்டி தூக்கிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  நெக்னாமலை மலை கிராமம் உள்ளது. கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் உள்ளன. அதே நேரத்தில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து சாலை வசதி இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதிக்காகவும், மருத்துவத் தேவைக்காகவும் அன்றாடம் ஏழு கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று வருகின்றனர்.

தமிழகத்தில் பாஜகவால் மட்டும் தான் காமராஜர் ஆட்சியை வழங்க முடியும் - அர்ஜூன் சம்பத் பேச்சு

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் அப்பகுதி மக்களின் நிலையை அறிந்து கடந்த அதிமுக ஆட்சியின் போது மண் சாலை அமைக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் சாலை அமைக்கும் பணி கைவிடப்பட்டது. இந்த நிலையில் அதே  கிராமத்தைச் சேர்ந்த  ராஜகிளியின் மனைவி ராஜேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இன்று அதிகாலை திடீரென வயிற்று வலி காரணமாக துடிதுடித்துள்ளார். கிராமத்தை சேர்ந்த மக்கள் கர்ப்பிணி பெண்ணை டோலி கட்டி சுமந்து ஏழு கிலோமீட்டர் தூரம் டார்ச் லைட் உதவியுடன் தூக்கி வந்துள்ளனர்.

கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி 8 மாத கர்ப்பிணி உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

பின்னர் அங்கிருந்து வாணியம்பாடி அருகே உள்ள வள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கர்ப்பிணி பெண்ணை சேர்த்துள்ளனர். அங்கு சிறிது நேரத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ள நிலையில் கிராம மக்கள் தொடர்ந்து சாலை வசதி இல்லாத இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இனிவரும் காலங்களிலாவது அரசு கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

click me!