டெங்குவால் சிறுமி உயிரிழந்த விவகாரம்; மாவட்ட ஆட்சியர் அதிரடி ஆய்வு

By Velmurugan s  |  First Published Sep 29, 2023, 11:05 AM IST

திருப்பத்தூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை 3 வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரா(வயது 35). இவரது கணவன் மணிகன்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். சுமித்ராவுக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(5) என 4 பெண் குழந்தைகளும், புருஷோத்தமன் என்ற எட்டு மாத கைக்குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநதி, புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23ம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில்  யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26ம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பண மாலையுடன் பதவி ஏற்று கொண்ட பாஜக தலைவர் செல்வகணபதி

இந்நிலையில் தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன், சிவராஜ் பேட்டை அனைத்து தெருக்களிலும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களிடம் தூய நீரில் தான் டெங்கு வேகமாக பரவும். எனவே நீரை மூடி போட்டு மூட வேண்டும் என்று கூறினார். சிவராஜ் பேட்டையில் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. எனவே நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசை அழைத்து அனைத்து கால்வாய்களும் தூர்வார உத்தரவிட்டார். 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருப்பத்தூரில் ஐந்து வயது குழந்தை டெங்குவில் இறந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அதனை தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் டெங்கு பரிசோதனை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தூய நீரில் தான் டெங்கு கொசுவானது முட்டையிடும். ஆகவே பொதுமக்கள் அனைவரும் குடிநீர் அல்லது தூய நீரை மூடி போட்டு மூடி வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து வளரும் அரசமரம்; பக்தர்கள் பரவசம்

காய்ச்சல் என்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். டெங்குவால் பாதிக்கப்பட்டால் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் செல்வதற்கான அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்படும்.  சிலர் வீட்டின் முன்பு கால்வாய் செல்லும் பாதையை மூடி உள்ளனர். பாதிக்கப்பட்டு இறந்த சிறுமிக்கு நிவாரணம் கிடைக்க பரிந்துரைக்கப்படும். இது குறித்து தமிழக முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், பாதிக்கப்படும் பகுதிகளில் விரைவாக பணிகளை செய்யவும் அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.

click me!