ராணிப்பேட்டை சிப்காட்டில் அடுத்தடுத்து 2 தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவத்தில் சக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ராணிப்பேட்டை சிப்காட் பேஸ் II ல் உள்ள தனியார் தோல் தொழிற்சாலையில் டிரம் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்தவர் மேற்கு வங்கம் மாநிலம், கர்பேட்டா பகுதியை சேர்ந்தவர் நசீப்கான் (23). வழக்கம் போல், டிரம்மை காயவைக்க ஏர் ப்ளோயர் இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.
அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, நசீப்கான் உடலை பிரேத பரிசோதனைக்காக, வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சிப்காட் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம்!
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி நீங்காத நிலையில், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சுரேஷ் காந்தி என்ற ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இரண்டு தொழிலாளர்கள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், அச்சத்தையும் சக தொழிலாளர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பாதுகாப்பு வசதி குறைபாட்டால்தான் ஊழியர்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி, சக ஊழியர்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் எனவும், பாதுகாப்பு வசதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.