வெளிநாட்டில் இருந்து வந்த கணவன் மர்ம மரணம்; மாயமான மனைவி மீது காவல்துறை சந்தேகம்

By Velmurugan s  |  First Published Sep 27, 2023, 6:35 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மாயமான மனைவியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி காந்திநகர் பகுதியைச் சேர்ந்த ராஜு மகன் ரவிச்சந்திரன் (வயது 47). இவருக்கும் கிருஷ்ணவேணி (35) என்பவருக்கும் 16 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று தீபக், திலீபன், நிஷாந்த், என மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 25 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டிற்கு ரவிச்சந்திரன் சென்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் சக்திவேல் என்பவருக்கும், கிருஷ்ணவேணிக்கும் இடையே  நான்கு வருடங்களாக தகாத உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு வருடத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்த நிலையில் ரவிச்சந்திரன் மனைவி கிருஷ்ணவேணியிடம் இதுவரை வெளிநாட்டில் சம்பாதித்த 13 லட்சம் பணம் மற்றும் 65 சவரன் தங்க நகைகள் எங்கே என கேட்டு அவ்வபோது சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது.

Tap to resize

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனால் ரவிச்சந்திரனுக்கும், கிருஷ்ணவேணிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் வீட்டின் கதவுகள் காலை முதல் இரவு நேரமாகியும் மூடிய நிலையிலேயே இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நாட்றம்பள்ளி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மலர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார் ஆகிய இருவரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று  பார்த்துள்ளனர். 

பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வெடித்த செல்போன்; உடல் கருகி இளம் பெண் பலி

அப்போது ரவிச்சந்திரன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் ரவிச்சந்திரனின் மனைவியான கிருஷ்ணவேணி மற்றும் அவருடைய பிள்ளைகள் வீட்டில் இல்லை. எனவே அவர்களை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கள்ளக்காதல் விவகாரத்தினால் மனைவியே கணவன் இறப்புக்கு காரணமா? அல்லது ரவிச்சந்திரனே தற்கொலை செய்து கொண்டரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!