சாலையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள்; தட்டிகேட்ட காவல் துறையினருக்கு கஞ்சா போதையில் கத்தி குத்து

By Velmurugan s  |  First Published Aug 14, 2023, 1:02 PM IST

வேலூர் கோட்டை அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள் தட்டிகேட்ட காவல் துறையினரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை பூங்கா அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 5 வாலிபர்கள் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவலர்கள்  பாலாஜி மற்றும் தமிழ் ஆகியோர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று கலாட்டா செய்து கொண்டிருந்த கஞ்சா போதை வாலிபர்களிடம் விசாரித்துள்ளனர்.

மேலும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லுமாறு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்களை குத்தி விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

தனியார் பள்ளியில் காலை பிரேயரில் மயங்கி விழுந்த மாணவி; சோகத்தின் உச்சத்தில் மாணவர்கள்

இதில் காயம் அடைந்த காவலர்கள் இருவரும் வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் குறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து காவலர்களை கத்தியால் குத்திய  வாலிபர்களை தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் வாலிபர்கள் மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் காவல் துறையினரையே கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திம்பம்  மலைப்பாதையில் சாலையின் குறுக்கே ஓடி விளையாடும் சிறுத்தை

click me!