குடியாத்தத்தில் இரும்புப் பெட்டியில் புதையலா? அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு!!

By Velmurugan s  |  First Published Aug 11, 2023, 11:04 AM IST

குடியாத்தத்தில்  இரும்புப் பெட்டியில் புதையல் இருப்பதாக கிளம்பிய வதந்தியால் பல மணி நேரம் போராடி இரும்பு பெட்டியை உடைக்க  முயற்சித்த பின்னர் வருவாய்த் துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது. 


வேலூர் மாவட்டம் குடியாத்தம் போஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இத்திரிஸ். வயது 57. எலக்ட்ரிக்கல் மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக பழைய  இரும்பு பெட்டி லாக்கர் ஒன்று இருந்துள்ளது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட இந்தப் இரும்பு பெட்டியை மேல்ஆலத்தூர் ரோட்டில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். அதனை தற்போது ஜோதிமடம் மசூதிக்கு இத்திரீஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.

தற்போது கவுண்டன்யா மகாநதி  ஆற்றை ஒட்டியவாறு  இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்புச் சுவர் அமைத்து வருகின்றனர். இந்தநிலையில் இரும்பு பெட்டியை ஆற்றங்கரையில்  கண்டெடுத்ததாகவும் அதில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். மேலும் புதையல் இருப்பதாகவும் காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

தொடக்கப்பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டல்; அரசுப்பள்ளி ஆசிரியர் அதிரடி கைது

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு குடியாத்தம்  காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, கோட்டாட்சியர் வெங்கட்ராமன்,  வட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள்  விரைந்து வந்தனர்.  இரும்பு பெட்டியை எடுத்துச் செல்வதற்காக முயற்சி செய்தனர். இதனிடையே  அங்கிருந்த இஸ்லாமியர்கள் இந்த இரும்பு பெட்டி இத்திரீஸ் என்பவருடைய குடும்பத்திற்கு சொந்தமானது என்று தெரிவித்தனர். இரும்புப்பெட்டியின் சாவி வீட்டில் உள்ளதாகவும், சில தினங்களில் கொடுப்பதாகவும், பெட்டியை அவர் மசூதிக்கு வழங்கி விட்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 

சிவகாசியில் கதறி அழுதபடி அண்ணாமலையின் காலில் விழுந்த மூதாட்டி

ஆனால் இதில் விலை உயர்ந்த பொருட்கள் இருப்பதாக வதந்தி பரவியதால் வருவாய் துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் செல்வதாக தெரிவித்தனர். ஆனால், இஸ்லாமியர்கள் அங்கேயே திறக்க வேண்டும் என்று கூறியதால், இரும்பு பெட்டியை அதிகாரிகள் சிறிய அளவிலான இயந்திரம் கொண்டு வெட்டினர். பல மணி நேரம் போராடியும் அந்தப் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த இரும்புப் பெட்டியை  குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

click me!