ராணிப்பேட்டை மாவட்டத்தில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிய இளைஞரை கைது செய்த காவல் துறையினர் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா சுங்கச்சாவடி அருகே குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 70). அதே பகுதியில் நகை தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் குடியாத்தத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு 12 சவரன் மதிப்பிலான தங்க காசுகள், தாலி ஆகியவற்றை ஆர்டர் கொடுப்பதற்காக பேருந்தில் வந்துள்ளார். அப்போது வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பேருந்தில் ஏறியதோடு முதியவர் வைத்திருந்த நகை பையினை திருடி சென்றுள்ளார்.
இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அந்த முதியவர் இது தொடர்பாக வாலாஜா காவல் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் சுங்கச்சாவடி அருகே தீவிரமாக ஆய்வு செய்ததில் சந்தேகத்தின் அடிப்படையில் நகை திருடிய குற்றவாளி திருப்பாற்கடல் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் பாலமுருகன் வயது(வயது 27) என்பது தெரியவந்தது.
வேலூரில் பள்ளி மாணவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் விபத்து; இருவர் சம்பவ இடத்திலேயே பலி
இதனைத்தொடர்ந்து அவரை கையும், கலவுமாக பிடித்து அவரிடமிருந்த சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான 12 சவரன் தங்க நகைகளை கைப்பற்றி அவர் மீது வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரியில் இருசக்கர வாகனம் மோதி தலைகுப்புற கவிழ்ந்த ஆட்டோ; 4 பேர் காயம்