சாமி ஊர்வலத்தில் நடனமாடுவதில் தகராறு; 3 பேருக்கு கத்தி குத்து, ஒருவர் கவலைக்கிடம்

Published : Aug 09, 2023, 09:44 AM IST
சாமி ஊர்வலத்தில் நடனமாடுவதில் தகராறு; 3 பேருக்கு கத்தி குத்து, ஒருவர் கவலைக்கிடம்

சுருக்கம்

வேலூரில் ஆடிக்கிருத்திகை சுவாமி ஊர்வலத்தில் நடனமாடுவதில் ஏற்பட்டதகராறில் 3 பேருக்கு  கத்திக்குத்து, ஒருவர் கவலைக்கிடம்.

வேலூர்மாவட்டம், வேலூர் வாணியர் தெருவில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இரவு சாமி வீதி உலா நடைபெற்றது. அப்போது இந்த ஊர்வலத்தில் இளைஞர்கள் நடனமாடி உள்ளனர். அப்போது தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(வயது 23) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது வாணி தெருவைச் சேர்ந்த ராஜேஷ்(20), அரவிந்தன்(21), கார்த்திகேயன்(29) ஆகியோர் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ், அரவிந்தன், கார்த்திகேயன் ஆகியேரை வெட்டி உள்ளார். மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.   

பட்டாசு கிடங்கில் அதிகாரிகள் ஆய்வின் போது வெடி விபத்து; 3 பேர் படுகாயம்

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஒன்று கூடியதால், சிவக்குமார் அங்கியிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். பின்னர் மூன்று பேரையும் மீட்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து மூன்று பேரை கத்தியால் குத்திவிட்டு தோட்டப்பாளையத்தில் பதுங்கி இருந்த சிவக்குமாரை கைது செய்தனர். 

6 வயது சிறுமிக்கு பாலியல்  தொல்லை கொடுத்த 65வயது முதியவர் கைது

சாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறில் மூன்று பேருக்கு கத்திகுத்து விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் .

PREV
click me!

Recommended Stories

பாலாற்றில் வெள்ள எச்சரிக்கை..! கரையோர கிராம மக்களே உஷார்... நிரம்பியது பேத்தமங்களா ஏரி!
ஷாக்கிங் நியூஸ்! வேலூரில் பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தல்! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!