சிறுவன் ஆசையாக குடித்த மாம்பழ ஜூஸ் பாக்கெட்டில் எலி; அதிர்ச்சியில் பெற்றோர்

By Velmurugan s  |  First Published Aug 8, 2023, 9:24 AM IST

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியில் சிறுவன் ஆசையாகக் குடித்த ஜூஸ் பாக்கெட்டில் எலி இறந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த பி.கபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், நதியா தம்பதியருக்கு 13 வயதில் ஒரு மகளும், நான்கு வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகின்றனர். இதனிடையே இவரது மகனும், மகளும் உணவகத்தின் எதிரே உள்ள பெட்டிக்கடையில் 10 ரூபாய் விலை உள்ள மாம்பழம்  ஜூஸ் வாங்கி வந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

undefined

அப்போது சிறுவன் சரவணன் ஜூஸ் பாக்கெட்டை எடுத்து ஓட்டையில் ஸ்டாவை வைத்து உரிய தொடங்கியுள்ளான். ஜூஸ் வழக்கம்போல் இல்லாமல் கசப்பு தன்மையுடன் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்து ஜூஸ் பாக்கெட்டை பிரித்து பார்த்த பொழுது அதில் குட்டி எலி ஒன்று  இறந்துள்ளது. 

புதுவையில் முதல்வரின் பிறந்தநாள் அலங்கார வளைவு விழுந்து விபத்து; 3 பேர் படுகாயம்

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் தற்போது மாம்பழம் ஜூஸில் எலி இருந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட நிலையில், வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் மாம்பழம் ஜூஸில் எலி இறந்து கிடந்த சம்பவம் கேவிகுப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சிறுவர்களுக்கு இனிப்புகளை வழங்கிவிட்டு புன்னகையுடன் நகர்ந்து சென்ற குடியரசு தலைவர்

click me!