அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்ற மாணவன் மாயம்; காவல் துறை தேடுதல் வேட்டை

By Velmurugan sFirst Published Aug 7, 2023, 8:20 AM IST
Highlights

ராணிப்பேட்டை அருகே அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து பள்ளிக்கு சென்ற 9ம் வகுப்பு மாணவன் மாயமான நிலையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை அருகே உள்ள காரை கூட்ரோடு பகுதியில் சமூக பாதுகாப்புத்துறை மூலமாக செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் அமைந்துள்ளது. இந்த இல்லத்தில்  சுமார் மொத்தம் 60-க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் இங்கேயே தங்கி ராணிப்பேட்டையை  சுற்றி உள்ள பல்வேறு  பள்ளிகளில் கல்வியை பயின்று வருகின்றனர்..

இந்த நிலையில் இதே இல்லத்தில் இருந்து ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த மாணவன் சதீஷ் (வயது 14). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி சென்றுள்ளான். ஆனால் பள்ளி முடிந்த பின்னர் சிறுவர் இல்லத்திற்கு திரும்பவில்லை என தெரிகிறது.

பச்சிளம் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை.! மக்களை காக்கும் கடையில் இருந்து தவறும் திமுக அரசு- விளாசும் இபிஎஸ்

இதனையடுத்து மாயமான பள்ளி மாணவனை பல்வேறு இடங்களில் சிறுவர் இல்லங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து இல்லத்தின் கண்காணிப்பாளர் கண்ணன் ராதா இது குறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று மாணவன் காணாமல் போனது குறித்து புகார் மனு ஒன்றை அளித்தார். 

கலைஞர் கருணாநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி!

புகரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் காணாமல் போன பள்ளி மாணவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராணிப்பேட்டையில் செயல்பட்டு வரும் அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து பள்ளிக்குச் சென்ற மாணவன் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.

click me!