கோவிலில் ஒன்றுமில்லை கடுப்பாகி பக்கத்து வீட்டில் செல்போன்களை திருடிய பலே திருடன்; சிசிடிவியால் பரபரப்பு!!

By Velmurugan s  |  First Published Aug 5, 2023, 11:28 AM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே திருடச்சென்ற கோவிலில் எதுவும் இல்லாததால் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்த திருடன் 2 செல்போன்களை திரு டிச் சென்றது தெரிய வந்துள்ளது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் செல்வ பெருமாள் கோவில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் நுழைந்ந  மர்ம நபர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி கோவிலில் மூலவர் உள்ள கதவை உடைக்க முயற்சி செய்துள்ளார்.

கோவிலில் உள்ள அறைகளில் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது எதுவும் கிடைக்கவில்லை. இதனால் எரிச்சலடைந்த திருடன் கோவில் அருகே ஒட்டி உள்ள வீட்டின் மேல் ஏறி  இரண்டு செல்போன்களை திருடி சென்றுள்ளார். காலையில் கோவிலுக்கு வந்த நிர்வாகத்தினர் கோவில் அறைகளின் பூட்டு உடைந்து இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

வாகன ஓட்டிக்கு உதவி செய்ய சென்ற காவலர் கார் மோதி பலி; தொழில் அதிபர் கைது

அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இரவு கோவிலுக்குள் மர்ம நபர் இறங்கி சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி கோயில் அறைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பின்னர் காவல்  நிலையத்தில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் செல்போன் திருடு போனவர்கள் புகார் கொடுத்ததின் பேரில் சிசிடிவி கேமராக்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெடுஞ்சாலை ஓரமாக வாகன ஓட்டிகளுக்கு ஒய்யாரமாக போஸ் கொடுத்த புலி

 

click me!