ஆம்பூர் அருகே அசுர வேகத்தில் மோதிக்கொண்ட இருசக்கர வாகனங்கள்; 2 பேர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

By Velmurugan s  |  First Published Aug 7, 2023, 2:13 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான். இவர்கள் இருவரும் தோல் தொழிற்சாலை இயந்திரங்கள் பழுது பார்க்கும் (மெக்கானிக் ) வேலை செய்து வந்தனர். மேலும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் கோளாறு ஏற்பட்டால் இருவரும் சென்று இயந்திர  கோளாறுகளை சரி செய்து விட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு பேரணாம்பட்டு பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட இயந்திர கோளாறை சரி செய்துவிட்டு பேரணாம்பட்டில் இருந்து மீண்டும் ஆம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது உமராபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாச்சம்பட்டு பகுதியில் ஆம்பூரில் இருந்து மாச்சம்பட்டு நோக்கி வந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

Tap to resize

Latest Videos

undefined

கிடு கிடுவென குறைந்த மேட்டூர் அணை நீர் மட்டம்; முழுவதுமாக வெளியில் தெரியும் நந்தி சிலை

இந்த விபத்தில் ரிஸ்வான் மற்றும் அருள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதே போல் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மாச்சம்பட்டு பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவரது அக்கா மகள்கள் இருவர் உட்பட மூன்று பேர் பலத்த காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து உமராபாத் காவல் துறையினர் பிரேதங்களை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கும், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவன் மீது கொடூர தாக்குதல்; தலைமை ஆசிரியர் மீது பெற்றோர் பரபரப்பு புகார்

 

click me!