வேலூரில் உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் நினைவிடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்
வேலூரில் இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் நினைவிடமான முத்து மண்டபத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
வேலூர் மாவட்டம், வேலூர் புதிய பெருந்து நிலையம் அருகில் பாலாற்றுக்கும் அருகாமையில் வரலாற்று சிறப்பு மிக்க இலங்கையை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்கிரமராஜ சிங்கேவின் சமாதி நினைவிடமாக உள்ளது. இதனை முத்து மண்டபமாக கட்டி அரசு பராமரித்து வருகிறது.
undefined
குடியாத்தத்தில் இரும்புப் பெட்டியில் புதையலா? அதிகாரிகள் எடுத்துச் சென்றதால் பரபரப்பு!!
இந்த நிலையில், முத்து மண்டபத்தை மேம்படுத்துவது தொடர்பாக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில், முத்து மண்டபத்தின் வரலாற்று சிறப்புகளை பாதுகாத்து, அதனை மேலும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இன்று தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் செல்வராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முத்து மண்டபத்தினுள் ஆய்வு செய்தனர்.