Chitra Pournami 2023: சித்ரா பௌர்ணமி ஸ்பெஷல்... திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரயில்கள்! தெற்கு ரயில்வே அறிவிப்பு

By SG Balan  |  First Published May 3, 2023, 3:31 PM IST

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு  ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த ஆண்டின் சித்ரா பௌர்ணமி நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு தொடங்கி முதல் மறுநாள் (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு நிறைவடைகின்றது.

இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சுமார் 15 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் பல முன்னேற்பாடுகளை செய்துவருகிறது. இந்நிலையில், சித்ரா பௌர்ணமி நாளை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Latest Videos

மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் வேலூர் - திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும். வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, கனியம்பாடி (இரவு 10 மணி), கண்ணமங்கலம் (இரவு 10.17 மணி), ஆரணி சாலை (இரவு 10.34 மணி), போளூர் (இரவு 10.49 மணி), அகரம் சிப்பந்தி (இரவு 11.03 மணி), துரிஞ்சாபுரம் (இரவு 11.15 மணி) வழியாக நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை அடையும்.

மறுமார்க்கமாக, திருவண்ணாமலை - வேலூர் சிறப்பு ரயில் மே 5 மற்றும் 6ஆம் தேதிகளில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படுகிறது. துரிஞ்சாபுரம் (அதிகாலை 4.08 மணி), அகரம் சிப்பந்தி (அதிகாலை 4.19 மணி), போளூர் (அதிகாலை 4.34 மணி), ஆரணி சாலை (அதிகாலை 4.49 மணி), கண்ணமங்கலம் (அதிகாலை 4.54 மணி), கனியம்பாடி (காலை 5.08 மணி) வழியாக அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை சென்றடையும்.

மாதம் ரூ.5,000 சேமித்தால் போதும்! 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சமாக மாறும்!

மே 5ஆம் தேதி விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருவண்ணாமலை சிறப்பு ரயில், வெங்கடேசபுரம் (காலை 9.29 மணி), மாம்பழப்பட்டு (காலை 9.39 மணி), ஆயந்தூர் (காலை 9.45 மணி), திருக்கோவிலூர் (காலை 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (காலை 10.08 மணி), அண்டம்பள்ளம் (காலை 10.14 மணி), தண்டரை (காலை 10.21 மணி) வழியாக பகல் 11 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை எட்டும்.

மறுமார்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்குக் கிளம்பும் சிறப்பு ரயில் தண்டரை (பகல் 12.57 மணி), அண்டம்பள்ளம் (பகல் - 1.14 மணி), ஆதிச்சநல்லூர் (பகல் 1.19 மணி), திருக்கோவிலூர் (பகல் 1.28 மணி), ஆயந்தூர் (பகல் 1.43 மணி), மாம்பழப்பட்டு (பகல் 1.49 மணி), வெங்கடேசபுரம் (பகல் 1.58 மணி) வழியாக பிற்பகல் 2.15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே மே 4 மற்றும் 5ஆம் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு சிறப்பு புறப்படும். வெங்கடேசபுரம் (இரவு 9.29 மணி), மாம்பழப்பட்டு (இரவு 9.39 மணி), ஆயந்தூர்(இரவு 9.45 மணி), திருக்கோவிலூர் (இரவு 9.57 மணி), ஆதிச்சநல்லூர் (இரவு 10.07 மணி), அண்டம்பள்ளம் (இரவு 10.13 மணி), தண்டரை (இரவு 10.20 மணி) வழியாக இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலைக்கு வந்தடையும்.

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு.. நிதியுதவி குறித்து அமைச்சர் சொன்ன குட்நியூஸ்

மறுமார்க்கமாக மே 5 மற்றும் 6ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தண்டரை (அதிகாலை 3.47 மணி), அண்டம்பள்ளம் (அதிகாலை 3.52 மணி), ஆதிச்சநல்லூர் (அதிகாலை 3.57 மணி), திருக்கோவிலூர் (அதிகாலை 4.10 மணி), ஆயந்தூர் (அதிகாலை 4.25 மணி), மாம்பழப்பட்டு (அதிகாலை 4.30 மணி), வெங்கடேசபுரம் (அதிகாலை 4.40 மணி) வழியாக அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

வேலூர் - திருவண்ணாமலை சிறப்பு ரயில் சென்னை கடற்கரை வரையும், திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் தாம்பரம் வரையும் நீட்டிக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஓம் நமசிவாய கோஷத்துடன் அரங்கேறிய அவினாசி லிங்கேசுவரர் ஆலய சித்திரை தேரோட்டம்

click me!