திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (36). கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சூர்யா (32). சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 5 மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தைகள் இருந்தன.
கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 ஆண் குழந்தைகளை கிணற்றில் வீசிக்கொன்று விட்டு அரசு செவிலியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு (36). கிராம ஊராட்சி செயலாளராக உள்ளார். இவரது மனைவி சூர்யா (32). சோமாசிபாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு 5 மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தைகள் இருந்தன.
undefined
இதையும் படிங்க;- அண்ணியுடன் உல்லாசமாக இருந்த கணவர்.. நேரில் பார்த்த மனைவி.. 2 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை..!
இந்நிலையில், சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல தம்பதிக்கு இடையே மீண்டு தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, திண்டிவனத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு சின்னராசு இரவு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி, குழந்தைகளை காணவில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பதறிப்போன அவர் மனைவியின் செல்போனை தொடர்பு கொண்ட போது அங்குள்ள கிணற்றின் அருகே சத்தம் கேட்டது.
இதையும் படிங்க;- அதுக்கு மறுத்த மருமகள்.. துடிக்க துடிக்க கொன்ற மாமானார்.. நடந்தது என்ன? பகீர் தகவல்..!
இதனால், அதிர்ந்து போன சின்னராசு உடனே போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்களை மீட்டனர். இதனையடுத்து, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் கணவர் சின்னராசுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.