திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையாரை மனமுகந்து நினைத்து கிரிவலம் வருவதும்.
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்று காலை 10.16 மணி முதல் நாளை மறுநாள் காலை 10.56 மணிவரை உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்குவது திருவண்ணாமலை. ஈசன் நெருப்பாக நின்று, மலையாகக் குளிர்ந்த தலம். நினைத்தாலே முக்தி தரும் தலம் என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டது. திருவண்ணாமலையில் அருணாசலேசுவரரையும், உண்ணாமலை அம்பிகையையும் தரிசிப்பது எப்படிச் சிறப்பானதோ, அதே அளவு சிறப்பானது அண்ணாமலையாரை மனமுகந்து நினைத்து கிரிவலம் வருவதும்.
கிரிவலம் செல்ல அனைத்து நாட்களும் உகந்த நாட்களாக இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி தினம் அன்று கிரிவலம் மேற்கொள்வது அனைத்தையும் விட சிறப்பானது. மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல மலை 14 கி.மீ சுற்றளவு கொண்டது. கிரிவல பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளன. இந்த லிங்கங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு.
undefined
இந்நிலையில், பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி இன்று காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் 6-ம் தேதி வியாழக்கிழமை காலை 10.56 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.