தாலுகா அலுவலகத்தில் அதிக சத்தத்துடன் பெயர்ந்த டைல்ஸ்; அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

By Velmurugan sFirst Published Feb 23, 2023, 1:49 PM IST
Highlights

திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை அதிக சட்டத்துடன் பெயர்ந்த டைல்ஸ் காரணமாக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவசர அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் திருவண்ணாமலை சாலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. அலுவலகத்தின் முதல் தளத்தில் வட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், கூட்டரங்கு  உள்ளிட்டவை உள்ளன. நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் கூட்ட அரங்கில் ஏதோ வெடித்தது போன்ற அதிகளவு சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்களும், பொதுமக்களும் அச்சத்துடன் தாலுகா அலுவலகத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.

நிலநடுக்கம் காரணமா என அச்சத்தில் இருந்த ஊழியர்களும் பொதுமக்களும் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என தெரிந்த பின்னர் முதல் மாடிக்குச் சென்று பார்த்தனர். அப்போது கூட்டறிங்கில் தரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ்கள் பெயர்ந்து இருந்ததை கண்டு வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

மக்னாவை பிடிக்க மீண்டும் கம்பீரமாக களத்தில் இறங்கிய சின்னதம்பி யானை

இதுகுறித்து தாசில்தார் சப்ஜான் தெரிவிக்கையில், சம்பவம் நடைபெறும் பொழுது தான் இங்கு இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் இருந்தேன். மேலும் சம்பவம் நடைபெறும் பொழுது கூட்டறிங்கில் யாரும் இல்லாததால் பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. டைல்ஸ் அதிக அளவு சட்டத்துடன் பெயர்ந்தது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை பொதுப்பணி துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

ஓசூரில் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு மத்திய அரசு அனுமதி - எம்பி செல்லகுமார் தகவல்

click me!