திருவண்ணாமலை கரையான்செட்டி தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் திமுக தொண்டரணி நகர துணை அமைப்பாளராகவும், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.
திருவண்ணாமலையில் திமுக நிர்வாகி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை கரையான்செட்டி தெருவில் வசித்து வருபவர் சங்கர். இவர் திமுக தொண்டரணி நகர துணை அமைப்பாளராகவும், பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் அவரது வீடு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். இந்த சப்தம் கேட்டு ஓடிவந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்த போது கார் எரிந்து கொண்டிருந்த பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
undefined
இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை நகர காவல்துறையில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் பொறுத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கடந்த 12ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஏடிஎம்களை உடைத்து ரூ. 73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.