அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்.. 2 அர்ச்சகர்கள் 6 மாதம் சஸ்பெண்ட்..!

By vinoth kumar  |  First Published May 3, 2023, 7:36 AM IST

பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா புகைப்படம் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது இது பெரும் சர்ச்சையானது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் அர்ச்சகர்கள் இரண்டு பேர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

பஞ்சபூத தலங்களில் அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா புகைப்படம் அச்சிடப்பட்ட கவரில் விபூதி, குங்குமம் வழங்கப்பட்டது இது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவு இல்லாமல் இதுபோன்று செயல்பட்ட அர்ச்சகர்கள் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று பவர் கட்.. எங்கெல்லாம் தெரியுமா?

இதுகுறித்து விசாரணை நடத்திய இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-  திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில், முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் என நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவோ எதுவும் பெறாமல்,  இத்திருக்கோயிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் K.சோமநாத குருக்கள் மற்றும் A.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத கவரினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் 01.05.2023 அன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க;- அட கடவுளே.. சீறிய போது வாடிவாசலில் மயங்கி விழுந்த சின்ன கொம்பன் காளை.. பதறிய விஜயபாஸ்கர்.. நடந்தது என்ன?

இது தொடர்பாக வரப்பெற்ற தகவல் அடிப்படையில் விசாரணை செய்த வகையில், அவ்வாறு பிரசாத கவர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வழங்கிய தன்னிச்சையாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவருவதாலும், திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் தாங்கள் இருவரையும் ஆறு மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!