மாதம் ரூ.5,000 சேமித்தால் போதும்! 5 ஆண்டுகளில் ரூ.3.5 லட்சமாக மாறும்!
வங்கிகளை விட தபால் நிலையங்களில் சேமிப்பதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும். தபால் நிலைய தொடர் வைப்புநிதி திட்டத்தில் மாதம் 5,000 ரூபாய் டெபாசிட் செய்தால், 5 ஆண்டுகளில் அந்தத் தொகை 3.48 லட்சம் ரூபாயாக முதிர்வடையும்.
வங்கிகள் டெபாசிட் செய்த தொகையை ஐந்தாண்டுகளில் இரட்டிப்பாக்கி வழங்கும் காலம் இருந்தது. ஆனால் அது கடந்த கால விஷயமாகிவிட்டது. இப்போதெல்லாம் எந்த வங்கியும் சேமிப்புக்கு 3-4 சதவீதத்திற்கு மேல் வட்டி கொடுப்பதில்லை. அதிக பணம் சம்பாதிக்க வங்கிகளைத் தவிர வேறு பல சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்.
மிக முக்கியமாக, தபால் நிலைய திட்டத்தில் முதலீடு செய்யும் பணம்பற்றி எந்த கவலையும் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் தபால்துறை முதலீட்டுக்கு அரசாங்கம் 100% உத்தரவாதம் அளிக்கிறது. பெரும்பாலான மக்கள் பண இழப்பைப் பற்றி கவலைப்படுகிறார்கள். அவர்களுக்கு இருக்கும் உத்தரவாதமான ஒரே வழி தபால்துறை முதலீடுதான். அஞ்சல்துறையின் தொடர் வைப்புத்தொகை (RD) திட்டத்தில் பணத்திற்கு நிலையான வட்டி கிடைப்பதுடன், பணம் முற்றிலும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
அதிக பென்சனுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு: EPFO அறிவிப்பு
5.8 சதவீத வட்டி
தபால் நிலைய வைப்புநிதித் திட்டங்களுக்கு மத்திய அரசு உத்தரவாதம் உள்ளது. அதே நேரத்தில் வங்கி வைப்புநிதித் திட்டங்களுக்கு அதிகபட்சம் 5 லட்சம் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. இந்த வழியில், ஒவ்வொரு மாதமும் சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் பெரிய முதிர்வுத்தொகையைப் பெறலாம். அஞ்சல்துறை தொடர் வைப்புநிதி திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது.
முதலீட்டை அப்படியே மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு 10 ஆண்டுகள் வரை முதலீடு செய்துவந்தால் சுமார் 8 லட்சம் ரூபாய் வரை முதிர்வுத்தொகை கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.100 டெபாசிட் செய்ய வேண்டும். டெபாசிட் தொகை ரூ.10 -ன் மடங்குகளில் இருக்கவேண்டும். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. இந்த முதலீட்டுக்கான வட்டி விகிதம் 5.8 சதவீதம்.
கர்நாடகாவில் சித்தராமையா மீண்டும் முதல்வராக அதிகம் பேர் விருப்பம்! சர்வேயில் தகவல்
சிறந்த முதலீடு
ஒருவர் தபால் நிலையத்தில் தொடர் வைப்புநிதி கணக்கு தொடங்கினால் மாதம் ஐந்தாயிரம் டெபாசிட் செய்துவந்தால் முதிர்வுத் தொகையாக 3.48 லட்சம் கிடைக்கும். காலாண்டு அடிப்படையில் வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும். தனிநபர் கணக்காகவும் கூட்டுக் கணக்காகவும் தொடங்கும் வசதி உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், கணக்கைத் தொடங்கிய நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தேவைப்பட்டால் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்குப் பிறகு டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 50 சதவீத தொகையை கடனாகப் பெறவும் வாய்ப்பும் உள்ளது. பின்னர் அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.
பணத்துக்கு உத்தரவாதம்
எந்தவொரு சூழ்நிலையிலும் தபால் துறை முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித் தரத் தவறினால், முதலீட்டாளர்களின் பணத்திற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், வங்கியில் உள்ள உங்கள் முழுப் பணமும் 100% பாதுகாப்பு இல்லை.
டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கியாரண்டி கார்ப்பரேஷன் (DICGC) திவாலான வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே உத்தரவாதம் அளிக்கிறது. இந்த விதி வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். இதில் அசல் மற்றும் வட்டி ஆகிய இரண்டும் அடங்கும். அதாவது இரண்டையும் சேர்த்து 5 லட்சத்துக்கு மேல் இருந்தாலும், ரூ.5 லட்சத்துக்குத்தான் உத்தரவாதம் கொடுக்கப்படுகிறது.
Go First: திவாலான கோ பஸ்ட்! 3 நாட்களுக்கு விமான சேவை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு