திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே தனியார் பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திருப்பனமூர் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வேகமாக சென்று கொண்டிரந்தது. அப்போது எதிர் திசையில் தனியார் வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பேருந்தும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
மும்பைக்கு குட்பை சொல்லும் SKY? கேப்டன்சி வழங்குவதாக வலைவிரிக்கும் கொல்கத்தா
இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 20 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவங்களை எல்லாம் எப்படி கலைஞர் சமாளிச்சிரோ? ரஜினியின் பேச்சை ரசித்து கேட்ட முதல்வர்
விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை அடுத்து அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.