பௌர்ணமியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வருகின்ற திங்கள் கிழமை பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் திருவண்ணாமலைக்கும் கூடுதல் பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
undefined
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 18ம் தேதி 130 பேருந்துகளும், 19ம் தேதி 250 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து 18ம் தேதி 30 பேருந்துகளும், 19ம் தேதி மாதவரத்தில் இருந்து கூடுதலாக 40 பேருந்துகளும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பல்வேறு இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 19ம் தேதி 265 பேருந்துகள் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 50 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு 19ம் தேதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றல்ல, இரண்டல்ல - 7 தேசிய விருதுகளுடன் இந்திய இசை உலகை ஆட்சி செய்யும் ஒற்றை தமிழன்
மேலும் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஓகூர் ஆகிய பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.