தனது குழந்தையிடம் தற்கொலை நாடகமாடிய லாரி ஓட்டுநர் பரிதாப பலி; சிறுவனின் கண் முன்னே சோகம்

By Velmurugan s  |  First Published Jul 31, 2024, 11:09 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனது குழந்தையுடன் தற்கொலை நாடகமாடிய நபர் இறுதியில் கழுத்தில் சேலை இறுகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 1ம் வகுப்பு படிக்கும் அளவில் மகன் உள்ளார். இதனிடையே இவரது மனைவி தனது பெற்றோரை பார்ப்பதற்காக தனது தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் ஜெகதீஸ் தனது மகனுடன் விளையாடியபடி பொழுதை கழித்து வந்துள்ளார்.

Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு 

Tap to resize

Latest Videos

அப்போது தனது குழந்தையிடம் விளையாட்டாக, “நான் சாகப்போகிறேன் டா” என கூறியபடி தனது படுக்கை அறையில் இருந்த மின்விசிறியில் புடவையை தனது கழுத்தில் மாட்டிக் கொண்டபடி இருந்துள்ளார். இவை அனைத்தும் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உதயநிதியின் தூண்டுதலால் என் மீது அடுக்கடுக்காக பொய் வழக்கு - சவுக்கு சங்கர் ஆவேசம்

திடீரென விளையாட்டு வினையாகவே, சேலை ஜெகதீசின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. இதனால் அவர் மூச்சுவிட முடியாமல் துடிதுடித்துள்ளார். இதனை பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், தனது தந்தை விளையாட்டாக நடிக்கிறார் என்று எண்ணி வேடிக்கை பார்த்தபடி இருந்துள்ளான். பின்னர் சிறிது நேரம் கழித்து ஜெகதீஸ் பேச்சு மூச்சின்றி இருக்கவே பதறிப்போன சிறுவன் தனது தந்தையை காப்பாற்ற முயன்றுள்ளான். இறுதியில் ஜெகதீஸ் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!