543 தொகுதிகளின் நிலை எதிர்க்கட்சிகளுக்கு முன்பாகவே தெரிந்துவிட்டது; ஸ்டாலினின் டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை

By Velmurugan sFirst Published Jun 1, 2024, 6:25 PM IST
Highlights

மோடி சாதாரண மனிதராகத்தான் கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்கிறார்  ஆனால் எதிர்க்கட்சியினர் விஷமத்தனமாக இதை அரசியல் ஆக்குகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அப்போது அண்ணாமலையார் கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை  மோடி மூன்றாவது முறையாக ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் வேண்டுதல் வைத்துள்ளேன். வேண்டுதலை சிவபெருமான் நிறைவேற்றி கொடுப்பார் என நம்பிக்கை உள்ளது. 

அழகர்கோவில் அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழா; ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மீன்களை அள்ளிச் சென்றனர்

Latest Videos

ஏடிஎஸ்பி வெள்ளத்துரை நேற்று காலை சஸ்பெண்ட் செய்துவிட்டு நேற்று மாலை அவரது பணி நிறைவு அன்று சஸ்பன்டை  ரத்து செய்துள்ளனர்.  காவல்துறையில் உயர் அதிகாரியாக உள்ளவர்களை கடைசி நாட்களில்  சஸ்பெண்ட் செய்வது என்பது அரசியல் அர்ப்பணர்ச்சியை காட்டுகிறது. ராகுல் காந்தி, மம்தா பேனர்ஜி இன்றோ, நாளையோ எப்போது வேண்டுமானாலும் என்ன வேணாலும் செய்யலாம். அதற்கு அரசியல் உரிமை சட்டத்தில் இடம் உள்ளது.

ஜூன் 4 நாட்டின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும் - ஸ்டாலின் நம்பிக்கை
 
543 தொகுதிகளும் எந்த பக்கம் செல்லும் என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாக தெரிந்துள்ளது -அதனால் தான் இன்று நடைபெற உள்ள எதிர்க்கட்சியின் கூட்டத்தை பல முக்கிய தலைவர்கள் புறக்கணித்துள்ளனர். மோடி கன்னியாகுமரியில் தியானம்  மேற்கொண்டு வருகிறார். பாஜகவின் ஒரு தொண்டன் கூட அங்கு செல்லவில்லை. வரவேற்பும் அளிக்கவில்லை. விவேகானந்தர் பாறை என்பது தனியாருக்கு சொந்தமானது. பிரதமர் தியானம்  செய்யும் போதும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். அவர்களை யாரும் தடுக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் இதையெல்லாம் விஷமதனாக அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள்  என தெரிவித்தார்.

click me!