திருவண்ணமலையில் 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கி குடித்த 5 வயது சிறுமி வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சாலைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவருக்கு 5 வயதில் காவியா ஸ்ரீ என்ற மகள் இருந்தார். இந்நிலையில் காவியா ஸ்ரீ நேற்று முன்தினம் வீட்டின் அருகில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் 10 ரூபாய் மதிப்பிலான குளிர்பானம் ஒன்றை வாங்கிக் குடித்துள்ளார்.
இதனை குடித்த சிறிது நேரத்திலேயே சிறுமியின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வாய், மூக்கில் இருந்து நுரை வெளியேறியபடி சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த சிறுமியின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
2 ஆண்டுகளாக குழந்தை இல்லை; உறவினர்களின் நச்சரிப்பால் தம்பதி விபரீத முடிவு?
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலன் இன்றி சிறுமி பரிதாபமாக உயிரிந்தார். இது தொடர்பாக குளிர்பான நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள ராஜ்குமார் 10 ரூபாய் குளிர்பானத்தை வாங்கிக் குடித்ததால் தான் எனது மகள் உயிரிழந்தார்.
திருப்பதியில் ஒருநாள் அன்னதானத்திற்கு மட்டும் இத்தனை லட்சம் செலவாகுமா? வெளியான பிரமிப்பூட்டும் தகவல்
இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். என் மகளை போன்று வேறு யாரும் பாதிக்காத வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மலிவு விலையில் குளிர்பானம் வாங்கிக் குடித்த சிறுமி வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.