மகள் வளைகாப்பு! பொருட்கள் வாங்க சென்ற தந்தை பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டி படுகொலை! திருவாரூரில் பயங்கரம்!

By vinoth kumar  |  First Published Aug 9, 2024, 12:54 PM IST

 மூத்த மகளின் வளைகாப்பு நிகழ்ச்சி களப்பாளில் உள்ள மாரிமுத்து வீட்டில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர். 


மன்னார்குடி அருகே மாரிமுத்து என்பவர் நடுரோட்டில் 3 பேர் கொண்ட கும்பலால் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள களப்பாள் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்த மகளின் வளைகாப்பு நிகழ்ச்சி களப்பாளில் உள்ள மாரிமுத்து வீட்டில் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமான உறவினர்கள் வந்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: Karnataka Couple Murder: காலையில் காதல் கல்யாணம்! மாலையில் கொலை! அந்த ரூமில் நடந்தது என்ன?

இந்நிலையில் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு பொருட்கள் வாங்க மாரிமுத்து சென்றுள்ளார். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து அந்த 3 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியது. 

இதையும் படிங்க: Armstrong Murder Case: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! பாஜக முக்கிய பிரமுகருக்கு சம்மன்! பரபரக்கும் அரசியல் வட்டாரம்

உடனே இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பிரசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பாஸ்கர் என்பவர் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெற்றது தெரியவந்தது. பல வழக்குகளில் மாரியமுத்து சிக்கியதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!