பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக நிர்வாகியின் மகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ரௌடி ஆர்க்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன, கோகுல், சக்தி, சந்தோஷ், அருள், சிவசக்தி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த ஞாயிற்றுக் கிழமை திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்டார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல தாதாவின் மனைவியும், வழக்கறியுருமான மலர்கொடி மற்றும் ஹரிஹரன் ஆகியோரை செம்பியம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 6 நபர்களிடம் காவல் துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. பின்னணியில் இருப்பது யார்? போலீஸ் எடுத்த அதிரடி முடிவு
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சதீஷ் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவரது தந்தை குமரேசன், திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.