MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Karnataka Couple Murder: காலையில் காதல் கல்யாணம்! மாலையில் கொலை! அந்த ரூமில் நடந்தது என்ன?

Karnataka Couple Murder: காலையில் காதல் கல்யாணம்! மாலையில் கொலை! அந்த ரூமில் நடந்தது என்ன?

திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திய சம்பவத்தில் அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Aug 09 2024, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Karnataka

Karnataka

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் கேஜிஎஃப் பகுதியில் உள்ள சம்பரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார்(30). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.  திருமணத்திற்கு பின்னர் தம்பதியினர் உறவினர்களுடன்  மண்டபத்தில் சிறிது நேரம் இருந்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
23
marrige 001

marrige 001

இதனையடுத்து தனி அறையில் புதுமண தம்பதி இருவர் மட்டும் பேசிக்கொண்டிருந்த போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. பின்னர் ஒருவரையொருவர் கத்தியால் குத்தியுள்ளனர். இருவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி லிகிதா ஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

33
Karnataka

Karnataka

மேலும் ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவீன்குமார் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டஅவரும் சிகிச்சை பலன்றி  உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே நாளில் காதல் தம்பதி, ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொண்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved