திருவள்ளூரில் 8 மாத கைக்குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்ககம் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். மீனவரான இவருக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனிடையே வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாட்டாக பிளாஸ்டிக் பந்து ஒன்றை விழுங்கி உள்ளது.
தூத்துக்குடியில் விஷவாயு அட்டாக்; இருவர் பலி, இருவர் மருத்துவமனையில் அனுமதி
பந்து குழந்தையின் தொண்ட பகுதியில் சிக்கிக் கொண்டதைத் தொடர்ந்து பதறிய பெற்றோர் உடனடியாக குழந்தையை பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையின் வாயில் இருந்து பந்தை எடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பின்னர் குழந்தையை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
நிலசரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நிதி உதவி அளித்த நடிகர், நடிகைகள்
அப்போது திடீரென மூச்சுத்திணறல் ஏற்படவே குழந்தைக்கு பழவேற்காடு மருத்துவமனையிலேயே தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிறந்து 8 மாதங்களேயான குழந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.