திருவள்ளூரில் தந்தையுடன் தீ மிதிக்கச் சென்ற 7 வயது சிறுவன் கால் தவறி தீக்குழியில் விழுந்ததில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊரட்சியில் காட்டுகொல்லை கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இப்பகுதியினரின் வழிபாட்டுக்காக கடந்த ஆண்டு மாரியம்மன் ஆலயம் கட்டப்பட்டு பிரமாண்டமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
5 வயது சிறுமியின் உயிரை குடித்த 10 ரூபாய் குளிர்பானம்; வாயில் நுரை தள்ளிய நிலையில் துடிதுடித்து பலி
இதன் தொடர்ச்சியாக முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கோவிலில் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 11 நாட்களாக 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீவிர விரதம் இருந்து தினசரி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. திருவிழாவின் இறுதி நாளான நேற்று கோவிலில் தீமிதி திருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி விரதம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒருவர் பின் ஒருவராக தீக்குழியில் இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தத் தொடங்கினர். அப்போது மேட்டுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன் தனது 7 வயது மகன் மோனிசுடன் தீக்குழியில் இறங்கினார். நெருப்பின் சூடு தாங்காமல் சிறுவன் தீக்குழியில் ஓடத் தொடங்கிய போது நிலைத் தடுமாறி தீக்குழியிலேயே விழுந்தான்.
திருப்பதியில் ஒருநாள் அன்னதானத்திற்கு மட்டும் இத்தனை லட்சம் செலவாகுமா? வெளியான பிரமிப்பூட்டும் தகவல்
உடனடியாக சுதாரித்துக் கொண்ட காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு சிறுவனை நெருப்பில் இருந்து மீட்டனர். மீட்கப்பட்ட சிறுவன் 40 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.