திருத்தணி அருகே லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் விடுதி, வெளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் 7 பேர் ஒன்றிணைந்து காரில் சுற்றுலா சென்றனர். இவர்கள் சென்ற கார் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த ராமஞ்சேரி கிராமம் அருகே சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணி அளவில் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும், எதிர் திசையில் வந்த காரும் நேருக்கு நேர் மோதி பெரும் கோர விபத்து ஏற்பட்டது.
வேளாங்கண்ணி கடல் அலையில் சிக்கிய 3 மாணவர்கள்; கரை ஒதுங்கிய இரு உடல்கள்
undefined
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரில் 5 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவர் மருத்துவமமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனி்டையே மோதல் குறித் து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு யெ்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருத்தணி அருகே சாலை விபத்தில் 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.