நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறிய பெற்றோரால் மனம் உடைந்த 10ம் வகுப்பு மாணவன் வீட்டில் யாரும் இல்லாதபோது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகிலுள்ள கார்த்திகாபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள நேதாஜி நகரில் வசிப்பவர் முடி திருத்தும் தொழிலாளி வெங்கடேசன். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு 12ம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும், 10ம் வகுப்பு படிக்கும் ஒரு ஆண் மகனும் உள்ளனர். இவர்கள் இருவரும் திருத்தணி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பிரபலமான தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை வெங்கடேசன் வழக்கம் போல் தனது பணிக்கு சென்று உள்ளார். மகன் பவன் குமார் (வயது 15) வீட்டில் இருந்துள்ளார். மேலும் அண்மையில் நடைபெற்ற அரையாண்டு தேர்வில் மாணவன் 60% மதிப்பெண் பெற்றதாகவும், மாணவனை மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று அவரது தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
undefined
அதானிக்கு தாரை வார்க்க தான் பிரதமர் மோடி விமான நிலையங்களை விரிவாக்கம் செய்கிறார் - ஜோதிமணி விமர்சனம்
மேலும் தாய் கல்பனா தனது மகளை டியூசனில் விடுவதற்காக சென்றுவிட்டார். இதனிடையே வீட்டில் தனியாக இருந்த மாணவன் பவன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து வீட்டிற்கு வந்து பார்த்த தாய் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ள விட்டோர் மாணவனை இரு சக்கர வாகனத்தில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்து மாணவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து திருத்தணி போலீசார் மாணவனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். மேலும் நன்றாக படிக்க வேண்டும் என்று தாய் கூறியதால் பத்தாம் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருத்தணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.